செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (08:44 IST)

20 வயது மாணவியுடன் 77 வயது தாத்தாவின் காதல்; டேட்டிங் ஆப்பில் மலர்ந்த காதல்!

மியான்மரை சேர்ந்த 20 வயது மாணவிக்கும், இங்கிலாந்தை சேர்ந்த 77 வயது நபருக்கும் டேட்டிங் செயலியில் காதல் உருவான விவகாரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஜோ. இவர் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் அதில் இங்கிலாந்தை சேர்ந்த 77 வயதான டேவிட் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நட்புரீதியாக பழகி வர நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இருவரும் பரஸ்பரம் காதலை பரிமாறிக் கொண்ட நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள், ஜோ இன்னும் பாஸ்போர்ட் வாங்காதது உள்ளிட்ட காரணங்களால் இருவரது சந்திப்பு நடக்காமல் உள்ளதாகவும், ஜோ இங்கிலாந்து வருவதை எதிர்நோக்கி டேவிட் காத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.