வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (22:29 IST)

முத்தையா முரளிதரனுக்கு பதவி கொடுக்கும் கோத்தபயா! அதிர்ச்சியில் தமிழர்கள்

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்ஷ, தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தார் என்பதும் அவர் விரைவில் பிரதமர் பதவியை ஏற்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே 
 
தம்பி அதிபராகவும் அண்ணன் பிரதமராகவும் இலங்கை உள்ளதால் ஒரு குடும்பத்திற்கே இலங்கையின் மொத்த அதிகாரமும் சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வடக்கு மாகாணம், மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய கிழக்கு மாகாணம் ஆகியவை அடங்கிய வடகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று கூறியவர் முத்தையா முரளிதரன் என்பதால் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை பெற்ற முத்தையா முரளிதரன், தங்கள் பகுதிக்கு ஆளுநராக வரக்கூடாது என்ற எதிர்த்து தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் முத்தையா முரளிதரனுக்கு ஒரு நல்ல பதவி கொடுக்க வேண்டுமென கோத்தபயா முடிவு செய்திருப்பதாகவும் அவருக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பகுதியில் ஆளுநர் பதவி கிடைக்கும் என்றும் இலங்கை அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன