செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (20:35 IST)

நிர்வாணமாக மட்டுமே அனுமதி; அதிசய அருங்காட்சியகம்

பாரிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகதிற்கு வரும் பார்வையாளர்கள் நிர்வாணமாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

 
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள பலைஸ் டி டோக்யா என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை ஓவியங்கள் பல வைக்கப்பட்டுள்ளன. 
 
இதை காண இயற்கை ஆர்வலர்கள் உள்பட பலரும் வந்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தை காண வருபவர்கள் நிர்வாணமாக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதேபோன்று கடந்த 2013ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த ஓவியக் கண்காட்சி ஒன்றில் பார்வையாளர்கள் நிர்வாணமாக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.