அங்கிளுக்கு டாட்டா சொல்லுங்க.. புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!

Tiger
Prasanth Karthick| Last Modified திங்கள், 19 அக்டோபர் 2020 (16:04 IST)
மெக்ஸிகோவில் சிறுமி ஒருவர் புலி ஒன்றை நாய்குட்டி போல வாக்கிங் அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மெக்சிகோவின் குவாசோ பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டில் வங்க புலி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் பணியில் பிஸியாய் இருந்த சமயம், அவரது இளைய மகள் யாருக்கும் தெரியாமல் புலியை அவிழ்த்துக் கொண்டு சாலையில் வாக்கிங் சென்றுள்ளார்.

புலியுடன் சிறுமி சாலையில் வருவதை பார்த்து அந்த பகுதியில் சென்றோர் பயந்து ஓடியுள்ளனர். காரில் சென்ற ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ பெரும் வைரலாகியுள்ளது.

மேலும் புலி போன்ற பயங்கரமான காட்டு விலங்கை சிறுமி அழைத்து வரும் அளவுக்கு சிறுமியின் பெற்றோர் கண்டிக்காமல் இருப்பது சிறுமிக்கும், மற்றவர்களுக்குமே ஆபத்தை ஏற்படுத்தும் என பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :