மீண்டும் மெட்டாவின் வேலைநீக்க நடவடிக்கை: இந்தியர்கள் பலர் பாதிப்பு..!
சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கையால் மெட்டாவில் உள்ள இந்திய ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 2,000 இந்திய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் உட்பட மெட்டாவில் உள்ள அனைத்து நிலைகளிலும் பணிநீக்கங்கள் நடந்துள்ளன. இந்த பணிநீக்க நடவடிக்கையில் அமெரிக் மற்றும் இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிறுவனத்தை ஸ்திரப்படுத்த வேண்டியதின் அவசியம் ஆகியவற்றால் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா கூறியுள்ளது. இருப்பினும், பணிநீக்கங்கள் குறித்து தங்களுக்கு போதுமான எச்சரிக்கை அல்லது வரவேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva