1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (20:10 IST)

2021ல் பதவி விலகப்போவதாக ஏங்கலா மெர்கல் அறிவிப்பு

ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் 2021ஆம் ஆண்டு, தன் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னவுகளை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"என் பதவிகாலம் முடிந்த பிறகு, எந்த அரசியல் பதவியும் வகிக்க மாட்டேன்" என்று பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
 
கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவராக மீண்டும் மறு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2000ஆம் ஆண்டிலிருந்து அவர் இக்கட்சியின் தலைவராக உள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெசி மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்தது.
 
கிறிஸ்துவ ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணி கட்சியான சமூக ஜனநாயக கட்சியும் முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பினை விட 10 சதவீத புள்ளிகள் குறைந்திருநதன.
மெர்கலின் துணைக் கட்சியான பவரியா கிறுஸ்தவ சமூக கட்சியும் பாராளுமன்ற வாக்கெடுப்புல் பேரிழப்பை சந்தித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல்கள் வர உள்ளன.
 
தனது மோசமான செயல்திறனுக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக மெர்கல் கூறியதோடு, அடுத்த தலைவரை தாம் தேர்வு செய்யப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.