புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (20:38 IST)

15 ஆண்டுகளுக்கு பிறகு... பூமிக்கு மிக அருகில் செவ்வாய்!

பூமியின் பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. இதில் செவ்வாய் கிரகம் முதலில் உள்ளது. இன்று செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கிறது. 
26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும். அதன்படி இந்த மாதம் 27 ஆம் தேதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர துவங்கியது. 
 
இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கிமீ தொலைவில் வருகின்றன. பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கிமீ தூரத்தில் சுழலும். எனவே, செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கினாலும், டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கிமீ தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது குறிப்பிடத்தக்கது.