1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2017 (19:09 IST)

ஃபேஸ்புக் மீது டிரம்ப் குற்றச்சாட்டு; விளக்கமளித்த மார்க் ஜூக்கர்பெர்க்

பாரபட்சமாக ஃபேஸ்புக் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார்.


 

 
ஃபேஸ்புக் தனக்கு எதிரான கொள்கையை பின்பற்றுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார். அதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
ஃபேஸ்புக் அமெரிக்க தேர்தலின் போது நடுநிலையாக இருக்க முயற்சித்தது. மக்களை ஒன்றினைக்க ஒவ்வொரு நாளும் நான் பணியாற்றினேன். அனைத்து மக்களின் குரலையும் அனைவரது கருத்துக்களுக்கான தளத்தையும் அளித்ததாக நாங்கள் நம்புகிறோம். 
 
ஃபேஸ்புக் நிறுவனம் அனைத்து மக்களுக்குமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபடும். மேலும், தேர்தலுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பும் தேசிய அரசுகளுக்கு எதிராக பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.