1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (11:20 IST)

குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் – ஆண்மை நீக்கம் செய்ய சொல்லி வேண்டுகோள்!

இங்கிலாந்தில் சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் தனக்கு ஆண்மை நீக்கம் செய்ய சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 34 வயது ஆரோன் கோலிஸ், சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி, கடந்த 2009 முதல் சிறையில் உள்ளார். சிறுவன் ஒருவனுக்கு இனிப்புக் கொடுத்து அவனை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் கோலிஸ். இந்த வழக்கில் அவர் சிக்கியதை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது போல 22 சிறுவர்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு உளவியல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, தனிமைச் சிறையில் உள்ளார் கோலிஸ். இப்போது கோலிஸ் தனக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். அப்போதுதான் அவருக்கு பிணை கிடைக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கான அணுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.