செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:55 IST)

தேனீ கொட்டி ஆள் அடையாளம் தெரியாமல் வீங்கிப்போன பியர் கிரில்ஸ்!

பியர் கிரில்ஸ் கொடிய விஷதன்மையுடைய தேனீ கொட்டியதால் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பியகிரில்ஸ். இவர் அடர்ந்த காடுகளில் சிக்கிக்கொண்டால் அங்கிருந்து எப்படி தப்பிக்க வேண்டும், உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுப்பார். 
 
அந்த வகையில் சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு கொடிய விஷதன்மையுடைய தேனீ ஒன்று அவரின் முகத்தில் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் வீங்கி சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளாராம். 
சமீபத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான மேன் vs வைல்ட் ஷோவில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அத்தொடரின் நாயகன் பியர் கிரில்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.