ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (13:39 IST)

விபத்தில் இழந்த தனது காலை நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த நபர்

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தனது வெட்டப்பட்ட காலை தனது நண்பர்களுக்கு விருந்தளித்த சம்பவம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2016ம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவரது காலில் பலத்த காயமடைந்துள்ளது. இந்த காயம் குறித்து மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த போது அவரது காலின் எழும்புகள் உடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் இனி நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து, செயல் இழந்த அந்த நபரின் காலை மருத்துவர்கள் துண்டித்துள்ளனர். மருத்துவர்கள் அனுமதியுடன் அந்த நபர் தனது காலை பதப்படுத்தி வைத்திருந்தார்.
 
இந்த நிலையில், அந்த நபர் பதப்படுத்தி வைத்திருந்த தனது காலை நண்பர்களுக்கு சமைத்து விருந்து வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்கில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த செய்தியை கேட்ட பலர் அதிரிச்சியடைந்துள்ளனர்.