15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் பில் தீட்டிய உபர் நிறுவனம்… அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!
இங்கிலாந்தில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் உபர் கால் டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். அவரது அந்த ரைட் 15 நிமிட நேர பயணம் மட்டுமே. அதற்கு எப்போதும் 10 டாலர் வரை பில் வரும்.
ஆனால் இந்த பயணத்தை முடித்த அவர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவருக்கு கிட்டத்தட்ட 39000 டாலர் (இந்திய மதிப்பில் 32 லட்சம்) பில் வந்துள்ளது. ஆனால் அவரது வங்கிக் கணக்கில் அவ்வளவு பணம் இல்லாததால் உபர் நிறுவனத்தில் அதை எடுக்கமுடியவில்லை. இதன் பின்னர் அவர் உபர் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசி பிரச்சனையை தீர்த்துள்ளார்.
இந்த சம்பவமானது உலகம் முழுவதும் சமூகவலைதளங்களில் பரவி ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.