திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (02:00 IST)

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு என்னை விற்க முயற்சித்தார்: கணவர் மீது கேரள பெண் பகீர் குற்றச்சாட்டு

கேரளாவை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனது கணவர் தன்னை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சித்ததாக போலீஸ் புகார் கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவை சேர்ந்த 25 வயது இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கணவருடன் சவுதிஅரேபியாவில் குடியேறினார்

திருமணம் ஆன ஒரே மாதத்தில் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று நாடு திரும்பிய அந்த பெண், 'தனது கணவர் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்துவதாகவும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தன்னை விற்க முயற்சித்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்

சவுதி அரேபியாவில் உள்ள ரியாஸ் இந்த புகாரை மறுத்துள்ளார். தனது மனைவி தன் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தார் என்றும், அவர் தனது சுயநினைவுடன் இந்த புகாரை கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தனது மனைவி மீண்டும் திரும்பி வந்து தன்னுடன் வாழ்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சவுதி ஊடகங்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து கேரள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.