30 மில்லியன் ஆண்டுக்கு முந்தைய ராட்சத டைனோசரின் புதை படிவங்கள்!
இந்த உலகத்தை ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆய்து வந்தது. சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 16 கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன.
அதன் பின்னர் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த இனமே அழிந்துவிட்டது. விண்கல்லின் தாக்கத்தால் இவை அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் டைனோசர்களின் எலும்புகலும், கால் தடங்களும் கிடைக்கின்றன.
இந்நிலையில் தற்போது முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்கு முந்தையது இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல், டைனோசரின் காலம் குறித்து நாம் கணித்த காலத்திற்கும் முன்பே இந்த புவியில் அவை வாழ்ந்துள்ளன என்பதை இந்த புதைபடிவங்கள் நிரூபிப்பதாக கூறியுள்ளனர்.