1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மே 2022 (11:24 IST)

Pillow House மாளிகையில் ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சம்!!

ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற மாளிகையில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல். 

 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.
 
இலங்கை கடற்படை தளபதி இல்லத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் பதுங்கியுள்ளதாக ஒரு புறமும், மற்றொரு புறம் ராஜபக்சே குடும்பத்தினர் தப்பி இந்தியா வந்து அடைக்கலமடைந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தூதரகம், ராஜபக்சே இந்தியா வந்துவிட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. ஆதாரமற்ற அந்த தகவலை நம்ப வேண்டாம் என கூறியது. இதனைத்தொடர்ந்து தற்போது ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற மாளிகையில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது என்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காக ராஜபக்சே இங்கு தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.