செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் விடுதிகளை மூடுங்கள்: ஐகோர்ட் உத்தரவு
குற்றாலம் பகுதியில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கிய விடுதிகளை உடனடியாக மூட மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றாலத்தில் இயற்கை நீர்வீழ்ச்சிகள் இருக்கும் நிலையில் ஒருசில விடுதிகள் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாகியுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் வினோத் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்
இதன் காரணமாக இயற்கை நீரோட்டத்தை மாற்றி உருவாக்குவதால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை உடனடியாக மூடுங்கள் என உத்தரவிட்டனர்
மேலும் செயற்கை நீர்வீழ்ச்சி குறித்த அறிக்கைகளை இன்னும் ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Edited by Siva