1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai high court ask question about ladies college security

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்பு காவலர்களை நிறுத்தாதது ஏன்? ஐகோர்ட் அதிரடி கேள்வி

Madurai
மகளிர் கல்லூரிகளில் மாணவர்களை பாதுகாக்க பாதுகாப்புக் காவலர்களை நிறுத்தாதது ஏன் என மதுரை உயர் நீதிமன்ற கிளை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகளிர் கல்லூரி முன் இளைஞர்கள் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணையின்போது அரசியல் தலைவர்கள் வரும்போது பாதுகாப்பு பணிகளுக்கு பல இடங்களில் பத்தடிக்கு ஒரு காவலர்களை நிறுத்திவைக்கும் காவல்துறை மதுரை மகளிர் கல்லூரியில் பாதுகாப்புக் காவலர்களை நிறுத்தி வைக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். 
 
மாணவிகளை பாதுகாக்க எந்த மாதிரியான நடவடிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையா?