1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (23:23 IST)

3600 சினிமா கலைஞர்களுக்கு உதவிய முன்னணி நடிகர்

இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இதுசில மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சில சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்த ஆக்ஸின சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், 3600 நடன கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார் நடிகர் அக்‌ஷய் குமார்.

கொரொனா கால ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் சினிமா கலைஞர்கள் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாகப் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அக்‌ஷய்குமார் தற்போது சுமார் 3600 சினிமா ந்டன காலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருள் வழங்கி உதவி செய்துள்ளார்.

மேலும், முதற்கட்ட கொரொனா ஊரடங்கின்போது,  அதிகளவில் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கியவர் அக்‌ஷய்குமார் ஆவார்.