திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (12:43 IST)

லைகா சுபாஸ்கரன் கோரிக்கை; 17 அரசியல் கைதிகள் விடுதலை!

lyca
லைகா சுபாஸ்கரன் கோரிக்கை; 17 அரசியல் கைதிகள் விடுதலை!
லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. 
 
இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றதில் இருந்து பல அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்
 
அந்த வகையில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கெ அவர்களை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தார்.
 
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 17 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விடுதலை செய்யப்படும் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 25 லட்ச ரூபாய்க்கு வழங்கப்படும் என லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran