ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (19:45 IST)

திருமணக் கோலத்தில் வந்த காதலியை கழற்றிவிட்ட காதலன் ! நடந்தது என்ன ?

சமீபத்தில் சீன தேசத்தில்  ஒருவருக்கு திருமணம் நடந்துகொண்டிருந்த போது மணமகனுடைய முன்னாள் காதலியும் திருமணக் கோலத்தில் மேடையில் ஏறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இந்த வீடியோ அந்நாட்டில் வைரலாகி வருகிறது.
சீனாவில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து ரிசப்சனில் இருவரும் நின்றுகொண்டுள்ளார்கள். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு பெண் திருமணக் கோலத்தில் மேடைக்கு வருகிறார்.
அங்கு மணமகனின் கையைப் பிடித்து தன்னை ஏற்றுக்கொள்ளும் படி கூறியுள்ளார் அப்பெண். ஆனால் மணமகன் இதை ஏற்காமல் அவரது கையை உதறியுள்ளார். இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு மேடையை விட்டி கிளம்பினார்.
 
அதன் பின்பு மணமகனும் மனைவியைத் தேடி சென்றார். கடைசியில் அப்பெண் மட்டுமே கண்ணீர் மல்க மேடியிலேயே அமர்ந்தபடி இருந்தார்.
இதற்காக அனைவரும் அவர் மேல் பரிதாபம் கொண்டனர்.