புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (20:23 IST)

'நீ எல்லாம் ஒரு மனுஷனா' என்று கேட்பது போல் 900 கற்பழிப்புகள் நடத்திய குற்றவாளி கைது...

ரஷ்யதேசத்தில் நிகழ்ந்த கொடூரம் தான் இது. தன் பாதுகாப்பில் விடப்பட்ட பல சிறுமிகளை விக்டல் ஸ்ஷ்வ்ஸ் என்ற 'மிருகம்'  9oo க்கும் அதிகமான முறை  கற்பழித்துள்ளதாக அவன் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் அவனைக் கைது செய்த போலீஸார் இது பற்றி விசாரனை மேற்கொண்டனர். 

இதனையடுத்து குற்றவாளியான விக்டர் ஸ்லிஷவ்ஸ்(37) கூறியதாவது:
 
நான் என் மனைவி ஓல்காவுடன் வசித்து  வருகிறேன்.எங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.இது போதாது என்பதால் மேலும் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை வளார்து வருகிறோம்.இந்த குழந்தைகளை தத்தெடுத்து வளார்ப்பதற்காக மாதம் தவறாமல் அரசாங்கத்திடமிருந்து 265 பவுண்டுகள்  பணம் தரப்படுகிறது. 
 
இந்நிலையில் காமப்பசியால்  சபலமடைந்த விக்டெர் தான் வீட்டில் வளர்த்து வந்த சிறுமிகளை வன்புணர்வு செய்துள்ளான். இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி விக்டரின் மனைவியான ஓல்காவிடம் கூறியிருக்கிறார், இதனைக்கேள்விப்பட்டதும் அடுத்த நிமிடமே அவர் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார்.
 
உடனே விரைந்து வந்த போலீஸார் விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த குற்றத்தை அவன் 5 வருடங்களாக நடத்தி வந்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.