தடுப்பூசி கண்டுபிடிச்சும் அடங்காத கொரோனா! – லண்டனில் மீண்டும் கட்டுப்பாடுகள்!
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா அதிகரித்து வருவதால் லண்டனில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் அவற்றை நேரடியாக மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளன. ஆனாலும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டன் பகுதிகளில் கொரோனா அதிகரித்து வருவதால் நாளை முதல் லண்டனில் உள்ள திரையரங்குகள், மால்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு அடைந்திருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.