1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (13:12 IST)

இறுதிச்சடங்கின்போது மண்சரிவு: 14 பேர் பலியான சோகம்!

landslide
இறுதிச்சடங்கின்போது மண்சரிவு: 14 பேர் பலியான சோகம்!
இறுதிச் சடங்கின் போது நிலச்சரிவு ஏற்பட்டு அதனால் 14 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் மத்திய ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. 
 
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் என்ற நாட்டில் வயதான ஒருவர் காலமானதை அடுத்து அவரை மண்ணில் புதைக்க இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது
 
அப்போது திடீரென அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் சரிந்தது. இதில் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பலரும் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து மீட்புக் குழுவினர் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டனர்
 
தற்போது வரை இந்த மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலர் மண்சரிவில் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva