1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:15 IST)

இறுதிச்சடங்கின்போது கண்விழித்து பார்த்த 3 வயது சிறுமி: மருத்துவர் மீது நடவடிக்கை

dead
இறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதி சடங்கு செய்யும் போது திடீரென கண் விழித்துப் பார்த்ததை அடுத்து மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மெக்சிகோ நாட்டில் 3 வயது சிறுமி கேமியா என்பவர் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் 
 
இதனையடுத்து அந்த சிறுமியின் உறவினர்கள் சோகத்தோடு உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதன்பின் இறுதி சடங்குகளை செய்தனர். அப்போது சிறுமியின் கையை லேசாக அசைந்ததாகவும், கண்விழித்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமி உயிரிழக்கவில்லை என்று தெரிந்ததும் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த சிறுமி மீண்டும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து மருத்துவரின் கவனக்குறைவு காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டதாக கூறி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது