செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:50 IST)

தாய்லாந்து கோத்தபய தற்காலிக தஞ்சம்: அடுத்தது எந்த நாடு?

kothapaya
சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திற்கு தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அடுத்தது எந்த நாட்டிற்கு செல்ல உள்ளார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
 
இலங்கையில் மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து இலங்கையில் இருந்து தப்பித்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்
 
இந்த நிலையில் ஒரு மாதம் சிங்கப்பூரில் இருந்த அவர் தற்போது தாய்லாந்துக்கு தஞ்சம் புகுந்து உள்ளதாக தெரிகிறது.  தாய்லாந்து அரசு கோத்தபாய ராஜபக்சவை தற்காலிகமாக தங்க அனுமதித்துள்ளது என்றும், அதிகபட்சமாக 90 நாட்கள் அவர் தங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் 90 நாட்களுக்குள் வேறு நாட்டிற்கு அவர் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேறு நாட்டை தேடுவதில் அவரது தரப்பினர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது அனேகமாக கோத்தபய ராஜபக்சே சுவிட்சர்லாந்து செய்யவாய் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது