1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (13:42 IST)

இளம்பெண் கடத்தி நாய்க்கூண்டில் அடைப்பு! தப்பித்தது எப்படி? – விலகாத மர்மம்!

பிலிப்பைன்ஸில் இளம்பெண் கடத்தி செல்லப்பட்டு நாய் கூண்டில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிலிப்பைன்சில் தனது காதலருடன் பப் ஒன்றிற்கு சென்றுள்ளார். பப்பிலிருந்து திரும்பும்போது மர்ம கும்பல் ஒன்று இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றுள்ளனர். உடனடியாக இதுகுறித்து பெண்ணின் காதலர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே காதலருக்கு வந்த வீடியோ அழைப்பு ஒன்றில் அந்த பெண்ணை கட்டி வைத்து பேஸ்பாலால் சிலர் அடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பெண் கடத்தப்பட்டு 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு ஷாப்பிங் மாலில் அந்த பெண்ணை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.


அப்போது அந்த கடத்தல்க்காரர்கள் தன்னை ஒரு நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருந்ததாகவும், அதிலிருந்து அவர் தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன தகவல்களின்படி அவர் கடத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு காவலர்கள் சென்றுள்ளனர்.

ஆனால் அந்த கடத்தல்க்காரர்கள் முன்னரே தப்பியுள்ளனர். அங்கு ஒரு நாய்க்கூண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து எப்படி அந்த பெண் தப்பித்தார் என்பது மர்மமாகவே இருக்கிறதாம்.

Edited By: Prasanth.K