புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (14:52 IST)

பெட்ரோல் விலை உயர்வால் போராட்டம்; ராஜினாமா செய்து கம்பி நீட்டிய பிரதமர்!

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததால் கஜகஸ்தான் அரசு ராஜினாமா செய்துள்ளது.

சமீபத்திய காலங்களில் பல நாடுகளில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கஜகஸ்தான் நாட்டிலும் எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் பல பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் கஜகஸ்தானின் அல்மாட்டி, மேற்கு மங்கிஸ்டாவ் ஆகிய மாகாணங்களில் அந்நாட்டு அதிபர் காசிம் ஜோமார்ட் அவசரநிலையை பிரகடனப்படுதினார். எரிபொருட்கள் விலையை குறைப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனாலும் மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் நிலைமை கைமீறியுள்ளது.

இதனால் கஜகஸ்தானில் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று மொத்தமாக ராஜினாமா செய்துள்ளது. இதனால் அதிபர் காசிம் இடைக்கால அரசை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.