காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி; பள்ளி பாடப் புத்தகத்துக்கு தடைவிதித்த பாகிஸ்தான்

Kashmir
Last Updated: சனி, 9 ஜூன் 2018 (14:33 IST)
பாகிஸ்தானில் உள்ள தனியார் பள்ளிகளில் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
பாகிஸ்தான் பஞ்சாப் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தும் சமூக அறிவியல் பாரப் புத்தங்களில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று இடம்பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாரியம் சார்பில் லாகூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
பள்ளி நிர்வாகம் மற்றும் பதிப்பங்கள் மேற்கொண்ட இந்த தவறுக்கு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். வாரியத்தின் அமைதி இல்லாமல் எந்த வகையான புத்தகம், துணை பாடநூல்கள் அச்சடிக்கவோ, வெளியிடவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பள்ளிகளின் குடோன்களில் உள்ள அனைத்து புத்கங்களையும் பறிமுதல் செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :