செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (17:30 IST)

அவ ஃபேமிலி கேன்சர் ஃபேமிலி: நமிதாவின் மனிதாபிமானமற்ற பேச்சு!

அவ ஃபேமிலி கேன்சர் ஃபேமிலி: நமிதாவின் மனிதாபிமானமற்ற பேச்சு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு எதிராக நடிகை நமிதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பிக் பாஸ் ஃபேமிலியும் ஒன்றாக திரும்ப தனியொரு மனுஷியாக போராடி வருகிறார் அவர்.


 
 
அனைத்து போட்டியாளர்களும் ஓவியாவை பற்றியே புறம் பேசி வருகின்றனர். அதிலும் காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோர் ஓவியாவை பற்றி புறம் பேசுவதையே முழு நேர பணியாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று நடிகை ஓவியா இல்லாத நேரத்தில் நமீதா காயத்ரி ரகுராமிடம் பேசிய விஷயங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் கூட மனிதாபமானம் இல்லாமல் நமீதா பேசியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
 
உங்களுக்கு தெரியுமா? அவளுக்கு கேன்சர் இருக்கு. அவ ஃபேமிலி கேன்சர் ஃபேமிலி என நமீதா காயத்ரி ரகுராமிடம் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் மோசமான கேன்சர் நோயால் தனது தாயை ஓவியா பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஓவியாவுக்கும் தங்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓவியாவுக்கு உணவு அளிக்க கூடாது, அவரை பாத்ரூம் இருக்க அனுமதிக்க கூடாது என நமீதா கூறியதும் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.