1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Jo Biden warn Russia about Ukaraine affairs

அதிநவீன ஆயுதங்களை அனுப்பிருக்கேன்… சீண்டாதீங்க..! – ரஷ்யாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை!

World
உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதிபர் ஜோ பைடன் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனில் குவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சோவியத் யூனியன் சிதறியபோது தனி நாடாக உருவானது உக்ரைன். உக்ரைனில் கடந்த 2013 வரை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட அதனால் அவர் தப்பித்து ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் நடந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் போரினால் உக்ரைனின் டோனஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசமானது.

அதை தொடர்ந்து உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன். உக்ரைனுக்குள் நுழைய ரஷிய படைகள் உண்மையான விழைவுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் 4 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்!