ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்.. பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை..!
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பின் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 8 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில் 16 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் பிறப்பு விகிதாச்சாரத்தை விட இறப்பு விகிதாச்சாரம் இரண்டு மடங்காக உள்ளது என்றும் பிரதமரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை 35 லட்சம் குறைந்துள்ளது என்றும் இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் ஜப்பானில் இளைஞர்களை இருக்க மாட்டார்கள் என்றும் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையை அதிகரிக்க ஜப்பான் பெண்களுக்கு பல சலுகைகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran