புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:23 IST)

மகுடம் சூடிய ஜப்பானின் புதிய பேரரசர்: உலக தலைவர்கள் வாழ்த்து

ஜப்பானின் புதிய பேரரசராக பதவியேற்கும் நருஹித்தோவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மக்களாட்சி நடைபெற்றாலும் அரச குடும் மரியாதையை பேணி காக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதுநாள் வரை பேரரசராக இருந்து வந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகினார். இதையடுத்து ஜப்பானின் அடுத்த பேரரசர் யார் என்று மாபெரும் கேள்வி எழுந்தது. அதை தொடர்ந்து அவரது மகன்  மக்கள் ஆதரவுடன் நருஹித்தோ பேரரசராக இன்று பதவியேற்றார்.

ஜப்பானில் இதற்காக இன்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் நேரில் கலந்து கொண்டனர். மேலும் பலநாட்டு தலைவர்களும் புதிதாக பதவியேற்றுள்ள நருஹித்தோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காலம்காலமாக மரபை பின்பற்றும் ஜப்பானின் அரச வம்சத்தில் இவர் 126வது பேரரசராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.