திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (13:19 IST)

விஜய் அட்ரஸ் தெரியல… மூன்று ஆண்டுகளாக கையில் பாட்டியிடம் இருக்கும் கடிதம்… வைரல் புகைப்படம்!

இணையத்தில் பாட்டி ஒருவர் விஜய்க்கு எழுதியாக சொல்லப்படும் கடிதம் வைரலாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் எனும் பகுதியைச் சேர்ந்த பாட்டி ஒருவர் நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதியாதாகவும், ஆனால் அவரின் முகவரி தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக அதைக் கையிலேயே வைத்திருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. 3 ஆண்டுகளாக அனுப்பாமல் வைத்திருந்த கடிதத்தைப் பற்றி தன்னுடைய பேரனிடம் அவர் கூறியுள்ளார். அவர் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர இப்போது அந்த கடிதம் வைரலாகி வருகிறது.