கொரோனா வைரஸுக்கு மருந்து கிட்டதட்ட ரெடி...

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (15:31 IST)
ஆஸ்திரேலியாவில் கொரானாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரானா வைரஸ் பாதிப்பு சீனாவில் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630-ஐ கடந்துள்ளது. அதோடு 30,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரானா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது. இந்நிலையில் தற்போது கொரானாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளது ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ குழு ஒன்று.
 
ஆம், புதிய கொரானா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது இந்த மருத்துவ குழு. வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதற்கு அதை தனியே பிரித்தெடுப்பது, ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பது ஆகிய இரண்டும் முக்கியமான படிநிலைகள் ஆகும். 


இதில் மேலும் படிக்கவும் :