1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (08:21 IST)

20 மாடி குடியிருப்பில் பயங்கர தீ - இத்தாலியில் பயங்கரம்!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இத்தாலியின் மிலன் நகரில் 60 மீட்டர் உயரத்திற்கு அந்த குடியிருப்புக் கட்டடம் இருந்துள்ளது. இந்த கட்டடத்தின் 15வது தளத்தில் தீ பற்றியுள்ளது. இந்த தீ மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. 20 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை.