திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (14:39 IST)

பெண்களை பணயமாக வைத்து பாலஸ்தீனியர்கள் கைது.. இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்..!

பெண்களையும் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்து பணயமாக வைத்து மிரட்டி பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சரணடையச் செய்து வருவதாக கூறப்படுவதற்கு பெரும் கண்டனங்கள் குவிந்துள்ளன.  
 
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் தொடங்கி 33 நாட்கள் ஆகி உள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. மருத்துவமனை, பொது இடங்கள், குழந்தைகள் தங்குமிடம் என்றும் பாராமல் அந்த பகுதியில் தாக்குதல் நடந்து வருவதால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்களையும் இஸ்ரேல் ராணுவம் கைது செய்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகளை கைது செய்ய அவர்கள் வீட்டு பெண்களை பணயக்கைதியாக வைத்து தீவிரவாதிகளை சரணடையச் செய்து வருவதாக கூறப்படுவதால் இஸ்ரேல் ராணுவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
Edited by Mahendran