திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (19:06 IST)

இனி இது யூத தேசம்: இஸ்ரேலில் வெடிக்கும் சர்ச்சை!

இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
இந்த மசோதாவானது, முழுமையான மற்றும் ஒற்றுமையான ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது. இஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவினை கண்டித்துள்ளார். 
 
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த மசோதாவினை வரவேற்று உள்ளார். மேலும், இந்த மசோதாவினை அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் ஆதரித்து உள்ளது. 
 
எட்டு மணிநேரம் நடந்த விவாதத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து உள்ளனர்.