1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (14:21 IST)

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர்: ஹமாஸ் அமைப்புக்கு சீனா ஆதரவு....

China
ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு க்கும்    இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

ஹமாஸ் படையை முற்றிலும் அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்த நிலையில் நேற்றிரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இஸ்ரேல் பாலத்தீனம் இடையிலான போர் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ''இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான போர்  நாங்கள் எந்த நாட்டையும் கண்டிக்க முடியாது…. ஹமாஸ் இயக்கத்தை நாங்கள் எதிர்க்கமாட்டோம் என சீனா வெளியுறவுத்துறை'' தெரிவித்துள்ளது.

மேலும், ''ஹமாஸ் அமைப்புக்கு எங்களால் கண்டனம் கூற முடியாது…இரு தரப்பும் சண்டையை நிறுத்தி, மக்கள் பாதிப்பை தவிர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.