1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (11:35 IST)

9000 ஆண்டுகள் பழமையான முகமூடியை வெளியிட்டது இஸ்ரேல்

9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை  பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக இணைய நாளிதழான டைம்ஸ் ஆஃப்  இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. பிங்க் மற்றும் மஞ்சள் சேன்ட்ஸ்டோனால், நியோலிதிக் யுகத்தில் இது செய்யப்பட்டது.
 
"இந்த முகமூடி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. கண்ணத்தில் உள்ள எலும்புகள் மற்றும் மூக்க எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது" என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரோனித் லூபு ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.