1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (09:22 IST)

யார் இந்த கோராசன்கள்?? தாலிபன்களுடன் என்ன பகை?

காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பிற்கு பொருப்பேற்றுள்ள ஐஎஸ்ஐஎஸ்-கே பற்றிய செய்தி தொகுப்பு இது. 
 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் கோராசன் பிரிவு பொருப்பேற்றுள்ளது. கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டில் ஈரான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கோரசான் பகுதியில் இந்த அமைப்பு உருவானது. 
 
உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சுமார் 20 வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவுதான் ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் கோராசன் பிரிவு. கோராசன் நெட்வொர்க் தெற்காசிய நாடுகளில் வலிமையாக உள்ளது. 
 
 தற்போது இவர்கள் ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினரிடம் இருந்து வெளியேறும் தீவிரவாதிகளை, தங்களது அமைப்பில் சேர்த்து சர்வதேச பயங்கரவாத சதிகளை அரங்கேற்றி வருகின்றனர். 
 
தலிபான் அமைப்பை விட்டு வெளியேறிய தீவிரவாதிகளை ஐஎஸ் அமைப்பினர் தளபதிகளாக ஆக்குகின்றனர். இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே தாலிபன்களை ஒடுக்கி ஆப்கானில்புதிய கிளையை உருவாக்க முயற்சிப்பதாகவும் அதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.