1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:18 IST)

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிக்கு பொறுப்பெற்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு

ஆப்கானிஸ்ஹன் நாட்டின் அரசு வீழ்ச்சியடைந்து தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்ததிலிருந்தே அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதை பார்த்து வருகிறோம். தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர் என்பதும் இதனால் காபூல் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் இருபத்தி நான்கு மணிநேரமும் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து அடுத்தடுத்து நான்கு வெடி குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட மொத்தம் 60 பேர் பலியாகியுள்ளதாகவும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த அமைப்புக்கு உலக நாடுகள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் பலியானதற்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது