செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (13:29 IST)

ஹிஜாப் போராட்டத்தில் மேலும் ஒரு பிரபலம் பலி: ஈரானில் பதட்டம்!

iran protest
ஈரான் நாட்டில் கடந்த சில வாரங்களாக ஹிஜாப் போராட்டம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் ஏற்கனவே மாஸா அமினி என்ற 22 வயது பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்தே கொலை செய்து விட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் பள்ளி கல்லூரி பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் வேலை செய்யும் மாணவிகள் குடும்ப தலைவிகள் ஆகியோர் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் போராட்டத்தில் ஏற்கனவே இளம்பெண் ஒருவர் பலியான நிலையில் தற்போது இன்னொரு பெண் போலீஸ் காவலில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது 
 
கடந்த 26ஆம் தேதி 19 வயது சமுக வலைத்தள பிரபலமான மெஹர்ஷாத் ஷாஹிதி என்ற இளம்பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அந்த பெண் காவல்துறை அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் ஹிஜாப் போராட்டம் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈரானின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
 
Edited by Mahendran