1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (14:58 IST)

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை; சாம்பலில் மூழ்கிய 11 கிராமங்கள்!

இந்தோனேஷியாவில் செமெரு எரிமலை வெடித்த நிலையில் 11 கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் அதிக எரிமலைகள் உள்ள நிலையில் சில சமயங்களில் எதிர்பாராமல் எரிமலை வெடிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள எரிமலை செமெரு. அந்த எரிமலை உள்ள லுமாஜங் பகுதியில் 11 கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் எரிமலையில் சாம்பல் புகை தோன்ற தொடங்கிய நிலையில் சில மணி நேரங்களில் எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதனால் எரிமலை சாம்பல் காற்றில் பரவி 11 கிராமங்களையும் மூடியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 56 பேர் படுகாயமுற்றுள்ளனர். அப்பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிமலை சாம்பலால் மூடப்பட்ட கிராமங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.