1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:02 IST)

வெளியேறிய அமெரிக்கா: தாலிபன்களால் இந்தியாவுக்கு ஆபத்தா?

இந்தியாவுக்கு எங்கள் தரப்பில் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என தாலிபன்கள் இந்தியாவுக்கு தகவல். 
 
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேற அமெரிக்கா முடிவு செய்தது. 
 
படிப்படியாக அமெரிக்க ராணுவம் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டுமென தாலிபான்கள் கெடு விதித்தனர். அதன்படி சற்றி முன் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. 
 
அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில் இனி தாலிபன்கள் பிடியில் அஃப்கானிஸ்தான் மக்கள் நிலை என்னவென அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தாலிபன் தரப்பில் இந்தியாவுக்கு தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில்... 
 
தாலிபன்களால் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் என்பது அறவே இருக்காது. இந்தியாவுக்கு எங்கள் தரப்பில் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது. பாகிஸ்தான் உடன் தொடர்ந்து இணைந்து பயணிக்க விரும்புகிறோம். பாகிஸ்தான் எங்களுக்கு இரண்டாவது வீடு. இரு நாட்டு எல்லைகள், மக்கள், மதம் என அதற்கான காரணங்கள் நீண்டு கொண்டே போகிறது. அதே நேரத்தில் அனைத்து நாடுகளுடனும் இணக்கமாக இருக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.