வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:56 IST)

என்னிடம் ஆணுறைகளை வாங்கி வரும்படி நகுல் கூறினார்.. உதவி இயக்குனரின் அதிர்ச்சி தகவல்..!

நடிகர் நகுல் என்னிடம் ஆணுறைகளை வாங்கி வரும்படி கூறினார், நான் வாங்கி வர முடியாது என்று சொன்னதால் என்னை படத்திலிருந்து தூக்கி விட்டார் என்று வாஸ்கோடகாமா என்ற படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர் வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நகுல் நடித்த வாஸ்கோடகாமா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் துணை இயக்குனராக வேலை செய்த ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் வாஸ்கோடகாமா படப்பிடிப்பின் போது ஒரு நாள் என்னிடம் நகுல் 3 ஆணுறைகளை வாங்கி வரும்படி கூறினார்.

எனக்கு வேலை இருக்கிறது, அதனால் வாங்கி வர முடியாது என்று மறுத்த நிலையில் என்னை படத்திலிருந்தே தூக்கி விட்டார் , இரண்டு வருடம் வேலை செய்ததற்கு எனக்கு சம்பளமும் தரவில்லை, படத்தின் டைட்டில் என்னுடைய பெயரும் வரவில்லை.

இந்த படத்தில் ஏற்கனவே ஒரு நடிகை நாயகியாக நடிக்க இருந்த நிலையில் அவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைக்க மாட்டார் என்பதால் அவரை படத்திலிருந்து நகுல் தான் தூக்கிவிட்டார் என்று அவர் வீடியோவில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த குற்றச்சாட்டு நகுல் தரப்பிலிருந்து என்ன விளக்கம் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva