திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (17:41 IST)

நவகிரகங்களின் தோஷங்களை நீக்க உதவும் பரிகாரம் என்ன...?

Navagrahas
சூரிய தோஷம் நீங்க நாம் குளிக்கும் நீரில் சிகப்பு நிறம் கொண்ட பூக்கள் அல்லது குங்குமப்பூவை போட்டு குளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் முற்றிலும் நீங்கும்.


சந்திர தோஷம் நீங்க குளிக்கும் முன்பு தயிரை கையில் எடுத்து அதனை முகம் மற்றும் உடல் முழுவதும் படுமாறு தேய்த்துக்கொண்டு பிறகு குளிக்கவேண்டும்.

செவ்வாய்  தோஷம் நீங்க வில்வ கொட்டையை நன்கு பொடிசெய்து, குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்த பிறகு சாதாரண நீரில் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

புதன்  தோஷம்  நீங்க கடல் நீரை பயன்படுத்தலாம். இல்லை என்றால் கல் உப்பு சிறிதளவு, மஞ்சள் சிறிதளவு, கடுகு சிறிதளவு எடுத்து, அதில் தேன் கலந்து பின்னர் அதனை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவேண்டும். இதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

வியாழன் தோஷம் நீங்க கருப்பு ஏலக்காய் கொதிக்கவைத்த நீரில் குளிப்பதால், வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

சுக்கிர தோஷம் நீங்க பச்சையான ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவந்தால் தீரும்.

சனி தோஷம் நீங்க கருப்பு எள் கொதிக்கவைத்த நீரில் குளிக்கவேண்டும். இதனால் சனி தோஷம் நீங்கும்.

ராகு தோஷம் நீங்க நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகிஷாக்ஷியை சிறிதளவு வாங்கி அதனை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் குளித்தாக் ராகு தோஷம் தீரும்.

கேது தோஷம் நீங்க எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கூடிய அருகம்புல்லை எடுத்து, அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் குளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் கேதுவால் உண்டாகும் தோஷங்கள் யாவும் நீங்கும்.

Edited by Sasikala