1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (12:01 IST)

இந்தியாவால் தனிமையான பாகிஸ்தான்: வங்காளதேசம் உள்ளிட்ட மூன்று நாடுகள் புறக்கணிப்பு

உரி தாக்குதலை அடுத்து இந்தியா சார்க் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பூடான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.


 

 
காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் ஆபாய சூழல் நிலவி வருகிறது.
 
இந்நிலையில் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
 
பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்து வருவதாக உலகம் நாடுகள் இடையே கருத்துகள் பரவி வரும் நிலையில் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
மேலும் 8 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் சார்க் மாநாட்டில், ஒரு உறுப்பு நாடு புறக்கணித்தாலும் சார்க் மாநாடு நடைப்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன்மூலம் பாகிஸ்தான் நாடு தற்போது தனிமரமாக நின்று கொண்டிருக்கிறது.