1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:29 IST)

26 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்யும் இந்தியா: விலை குறைய வாய்ப்பு!

Oils
26 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்வதிருப்பதை அடுத்து இந்தியாவில் பாமாயில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கடந்த சில நாட்களாக பாமாயில் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த உடன் பல மடங்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உள்நாட்டில் பாமாயில் விலை உயர்வை தடுக்க பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அந்த வகையில் 26 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியா உறுதி அளித்துள்ளதாக இந்தோனேசிய அரசு தகவல் தெரிவித்துள்ளது
 
3.16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான  பாமாயில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படவிருப்பதால் பாமாயில் விலை விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனை அடுத்து இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.