நாடாளுமன்றத்தில், பெண்ணிடம் காதலைச் சொன்ன எம்.பி : அப்புறம் என்ன ஆச்சு ?
இத்தாலி நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கியமான விவாசத்தின் போது, உரையாற்றிக் கொண்டிருந்த எம்.பி ஒருவர், தனது தோழியிடம் காதலைக் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாடாளுமன்றத்தில்,,சமீபத்தில் நடைபெற்ற நிலநடுக்கத்துக்கு பிறகு மேற்கொள்ளப் படவேண்டிய நிவாரண உதவிகள், புனரமைப்புகள் ஆகியவற்றுக்கான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, எம்.பி. டி மயூரா என்பவர் எழுந்து புயல் நிவாரணம் மற்றும் மக்களுக்கு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது, தன் பேச்சை சிறிது நிறுத்திய மயூரா, பொதுமக்கள் கேலரியில் அமர்ந்திருந்த தனது பெண் தோழி எலிசாவை நோக்கி, என்னை திருமணம் செய்து கொள்வாயா எனக் கேட்டார்.
அதைக் கேட்ட மக்களும், சபாநாயகர் முதலான சகல எம்.களும் ஆச்சர்யத்திற்கு ஆளாகினர்.
இதைக் கேட்டு சபாநாயகர் உள்பட அனைவரும் சிரித்தனர்.அப்போது, மயூராவுக்கு ஆறுதல் சொன்னனர். ஆனால், சபாநாயகர் பொது இடத்தில் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு இப்படி நடந்து கொள்ளக் கூடாது என அவரை எச்சரித்ததாகத் தெரிகிறது.
அதன்பிறகு, செய்தியாளர்கள் எம்.பி., மயூராவிடம் , உங்களது கேள்விக்கு காதலி எலிசா என்ன முடிவு சொன்னார் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு,அவர், திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.