ஓசி கோட் வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்த இம்ரான் கான்!
கடந்த மாதம் 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியானது. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியானது.
ஆனால், பதவியேற்பில் எதிர்கட்சிகளால் சில குழப்பம் ஏற்பட்டது. தற்போது இவை அனைத்தையும் மீறி இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவியேற்றார் இம்ரான்கான்.
எம்பியாக பதவியேற்று ஆவணத்தில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்துக்கான அடையாள அட்டை பெறுவதற்காக புகைப்படம் எடுப்பது வழக்கம். அப்போது அவர் கோட் அணியவில்லை.
எனவே அருகில் இருந்த அங்கிருந்த நாடாளுமன்ற ஊழியரது கோட்டை அணிந்து கொண்டு அடையாள புகைப்படத்துக்கு இம்ரான் கான் போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.